காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Saturday, September 4, 2010

மழை

*திரிந்து போன தூரிகைகள்

* சின்ன சின்ன ஓவியங்கள்

*உலகத்தின் வெற்றிக்கு
விழுகின்ற எழுச்சிகள்

*விழுந்து தாங்கும்
விதையளவு விழுதுகள்

*காற்றின் மர்மம் தீண்டும்
இயற்கையின் விரல்கள்

*வானம் வீசும்
ஒற்றை எழுத்து
கவிதைகள்

*குருடரும் வாசிக்க‌
முடிந்த ஓசைக்காவியங்கள்

*சூரியன் நோக்கி பறந்த‌
நீர்ப்பறவைகள்

*அருவிகள் செய்யும்
ஆண்டவன் விரல்கள்

*கடலின் தொலைந்து போன‌
செல்வங்கள்

*மேகத்தின் கட்டவிழ்ந்த
கூந்தல்

* பூமியின் சுழற்ச்சிக்கு
ஆண்டவன் கண்டுபிடித்த‌
மூலிகைப் பெட்ரோல்

*கவிதை முடித்து வைக்க‌
ஏது வழி
மழைத்துளியே முற்றுப்புள்ளி

2 comments:

இராகவன் நைஜிரியா said...

மழை பற்றிய கவிதை அருமை.

மழை பற்றி சில கவிதைள் வாசித்து இருந்தாலும், உங்களின் வர்ணனைகள் வித்யாசமாக இருக்கின்றது.

// *குருடரும் வாசிக்க‌
முடிந்த ஓசைக்காவியங்கள் //

வித்யாசமான சிந்தனை.

கவிதை மட்டுமல்லாமல், மற்ற தளங்களிலும் உங்களால் பயணம் செய்ய இயலும். முயற்சி செய்யுங்கள் நண்பரே.

விநாயகதாசன் said...

நன்றி நண்பரே நிச்சயம் முயல்கிறேன்

Related Posts with Thumbnails