காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Monday, September 27, 2010

மாணவர்க்கு அரசியல் தேவையா?


அன்பர்களுக்கு வணக்கம்

என் கருத்து
மாணவர்களுக்கு அரசியல்  தேவை
ஏன் எனில் இன்றைய மாணவர்தாம் நாளைய தலைவர்கள்.
இன்றே விதைத்து நீர் ஊற்றி காத்தால் தான் நாளை விதைத்தவர்க்கு மட்டுமல்லாது எல்லோர்க்கும்
உண்ண கனி கிடைக்கும்.
அதுபோல் தம்மையே விதையாக்கி அரசியல் அறிவை மேம்படுத்தி வளர்ந்து நிற்கும் ஒருவரால்தான் ஒரு சமூகத்தை மேம்படுத்தும் தலைவனாக முடியும்.

ஆம் அரசியல் என்பது சமூக மேம்பாட்டிற்கான ஒரு களம்.

சமூக மேம்பாடு என்பது என்ன?

தன் தேவைகளுக்காக ஒரு தனி மனிதன் வாடாதிருப்பதும், மற்றொருவரை நாடாதிருப்பதும் தான். அப்படி ஒரு நிலை உடனடியாக ஏற்பட இன்றைய சூழ்நிலை ஏதுவாக இல்லாதிருக்கலாம்.ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிலைக்காக போராடுவதுதான் ஒரு தலைவனின் நிலையாக இருக்க வேண்டும். அதிலும் அந்த தலைவன் ஓர் அரசனாகவும் அதாவது அரசை ஆள்பவராகவும் இருந்தால்தான் அது சாத்தியமாகும். அதற்கு அவர் ஜனநாயக முறைப்படி தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள அரசியல் தான் சிறந்த களம்.


அத்தகைய சிறந்த களத்தில் மாணவர்கள் தம்மை ஈடுபடுத்திக்கொல்வது சிறந்த ஒன்றே!!!

அரசியல் ஒரு சாக்கடை என்பது பொதுவாய் இன்றைய நடைமுறை.
இன்றைய நடைமுறை நிலை என்பதே அரசியல் நிலை ஆகிவிடாது.
அது இன்றைய அரசியல் தலைவர்களின் நிலை.
அதை மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் இன்றைய மாணவராம் நாளைய தலைவருக்கு நிச்சயம் உள்ளது.

தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யவும்

9 comments:

ப.கந்தசாமி said...

நல்ல கருத்தாத்தான் இருக்கிறது. ஆனால் படிப்பை கோட்டை விடக்கூடாது அல்லவா?

விநாயகதாசன் said...

வருகைக்கும் உங்கள்
கருத்திற்கும் மிக்க நன்றி
"நிச்சயமாக கல்விதான் தற்போது உலகின் மூன்றாம் கண்
ஆனால் அது சமூக பார்வைக்கு தடையாய் இருந்துவிட கூடாதல்லவா?"

Unknown said...

இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.ஆனால் மாணவப் பருவத்தில் வேண்டாம் என்பது எனது கருத்து. ஏனெனில், மாணவப்பருவத்தில் வந்தால் அரசியல் கூட்டம், கட்சித்தொண்டு என படிப்பு பாழாகிவிடும்.

விநாயகதாசன் said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜிஜி
படிப்பு பாழாகாமல் தங்கள் ஆர்வத்தையோ
சிறிது ஈடுபாட்டையோ மேற்கொண்டாலே போதுமானது

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு கருத்து. நல்ல ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டுவர மாணவர்களாலும், இளைஞர்களாலும் மட்டுமே முடியும்.
கல்லூரி இறுதி ஆண்டில் ஒரு குழுவாகச் சேர்ந்து அரசியல் பற்றி விவாதித்து, அவர்களுக்குள் ஒரு பலம் வாய்ந்த இயக்கத்தை உருவாக்கலாம்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
தமிழ் மனத்தில் பதிந்து கொள்ளுங்கள். நிறைய பேர் படிப்பார்கள்.
வாழ்த்துக்கள்.

Unknown said...

நண்பரே!

தங்கள் பதிவு, தங்கள் கேள்வி
மிகவும் சிக்கலான ஒன்று, நன்கு
ஆராய வேண்டிய ஒன்று
நல்லதா கெட்டதா என்றால்
நல்லது, ஆனால் நடக்குமா
நடக்காதா என்றால் நடக்காது, நடை
முறைக்கு ஒவ்வாது
அரசியல் தேவையில்லை
அரசியல் அறிவு தேவை.
அவ்வாறு போதிக்கும் சூழ்நிலை
வருமா
மறுப்புரை அல்ல கருத்துரை
நண்ப மன்னிக்க!

புலவர் சா இராமாநுசம்

கவி அழகன் said...

அருமை அருமை

விநாயகதாசன் said...

வருகை புரிந்து
தங்கள் கருத்துக்களை
பகிர்ந்து கொண்ட அனைத்து
அன்பர்களுக்கும் நன்றி

Related Posts with Thumbnails