காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Wednesday, August 18, 2010

"அவை" அல்ல "அது"



உரு கொண்ட ஓர் நிழலாய்
அருகினிலே என் மனைவி
கவிதையின் கருவாய்
என் வாழ்வில் அவள்

நரை வந்து வீழ்ந்தாலும்
இவள் தளிர்குறையா
பருவமலர்
தேய்மானம் கொண்டதனால்
தங்கமென்ன கல்லின் இனமா

கண் ரெண்டும் கலந்த பின்னே
பிரிவைத்துற்ந்து
இல்லறம் திறந்தோம்

சோகமென்று வந்துவிட்டால்
என் கண்ணீர் நதி
கலப்பது அவள் கடலில்
அவள் நதியோ என் கடலில்
ஒற்றை மகிழ்ச்சி
இருமனம் சேர்ந்து
இரு மடங்காய்

நீதான் என் முதல் மனைவி
நீதான் என் இரண்டாம் மனைவி
முதலுக்கும் இரண்டுக்கும்
இடைவெளி ஒரு பிறவி

60 வயது மனதை அறுத்தது
நம் வீட்டு கடிகாரத்தில்
எமன் வரும் நேரம் எப்போதும் தெரிந்தது

முதல் பார்வை முதல் பேச்சு
முதல் முத்தம் முதல் உறவு
இன்னும் பல "முதல்" களை
கோர்த்த முத்தாய் காத்த உள்ளத்து ஓரம்
முதல் "கடைசியாய்"
ஒட்டிக்கொண்டது
மரணபயம்

கஷ்டமேதும் தந்திராத
என் இஷ்டமான அபிமானி
பெண்மைக்கே முதன்மை என்று
உரிமை  நீ  கோராதே
தனிமையின் அறிமுகம்
நீ எனக்கு செய்யாதே
மாறாக நடந்திடுமோ
ஐயகோ வேண்டமடி
உன் அழுகை கேட்க‌
எரியும் என் சிதையும்
எழுந்து வரும்...

கட்டி அணைத்தபடி
"முதல்"களை மீண்டும்
தூசு தட்டுவோம்
ஒட்டுச்செடி போல‌
ஈருடல் மறந்து
ஓருடலாய் இருப்போம்
வரும் மரணம்
நமை
"அவை" எனக்காணாது
"அது" என காணட்டும்...

2 comments:

சுஜா செல்லப்பன் said...

முதுமையின் உணர்வுகளை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்..ஒவ்வொரு வரியும் அருமை..பாராட்டுக்கள் !!

விநாயகதாசன் said...

மிக்க நன்றி சுடர்விழி
உங்கள் மேலான கருத்துக்களை
மேன்மேலும் எதிர்பார்க்கிறேன்

Related Posts with Thumbnails