* சின்ன சின்ன ஓவியங்கள்
*உலகத்தின் வெற்றிக்கு
விழுகின்ற எழுச்சிகள்
*விழுந்து தாங்கும்
விதையளவு விழுதுகள்
*காற்றின் மர்மம் தீண்டும்
இயற்கையின் விரல்கள்
*வானம் வீசும்
ஒற்றை எழுத்து
கவிதைகள்
*குருடரும் வாசிக்க
முடிந்த ஓசைக்காவியங்கள்
*சூரியன் நோக்கி பறந்த
நீர்ப்பறவைகள்
*அருவிகள் செய்யும்
ஆண்டவன் விரல்கள்
*கடலின் தொலைந்து போன
செல்வங்கள்
*மேகத்தின் கட்டவிழ்ந்த
கூந்தல்
* பூமியின் சுழற்ச்சிக்கு
ஆண்டவன் கண்டுபிடித்த
மூலிகைப் பெட்ரோல்
*கவிதை முடித்து வைக்க
ஏது வழி
மழைத்துளியே முற்றுப்புள்ளி